மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் சம்பவ இடத்தில் இருவர் பலி

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் சம்பவ இடத்தில் இருவர் பலி;

Update: 2025-08-11 05:41 GMT
மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் சம்பவ இடத்தில் இருவர் பலி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சித்தாமூர் To சூனாம்பேடு சாலையில் கொளத்த நல்லூர் என்ற இடத்தில் இருசக்கரம் வாகனத்தில் இருவர் இன்று அதிகாலை சித்தாமூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த புத்திரன் கோட்டை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) ராமலிங்கம் (வயது 52 )ஆகிய இருவர் சம்பவ இடத்தில் பலியானர்.இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருசக்கர வாகன மூலம் சென்னைக்கு பணிக்கு செல்லும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேதத்தை கைப்பற்றி சித்தாமூர் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News