முன்னாள் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு எம்எல்ஏ ஆலோசனை
முன்னாள் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு எம்எல்ஏ ஆலோசனை;
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு ,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சி வாரியாக கடம்பூர் முதல் சிறுநாகலூர் வரை மொத்தம் 14 ஊராட்சிகளில் நடைபெற்ற கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் C.விவேகானந்தன், அச்சிறுபாக்கம் ஒன்றிய அவைத் தலைவர் சேரன்,ஒன்றிய, கழக நிர்வாகிகள், செயலாளர்கள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.