மத்தூர் அருகே கார் விபத்து கணவன்- மனைவி பலி.

மத்தூர் அருகே கார் விபத்து கணவன்- மனைவி பலி.;

Update: 2025-08-11 08:23 GMT
பெங்களூரில் இருந்து கணவன் மனைவி நேற்று இரவு பாண்டிச்சேரிக்கு சொகுசு காரில் சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த கண்ணண்டஅள்ளி 4- ங்கு வழி சாலையில் கார் வந்த போது ரவுண்டானா சுவர் மீது மோதியதில் பாண்டிச்சேரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் துரைராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News