குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட பொன்மனை பேரூராட்சி, வில்லுசாரி மலை கிராமத்திற்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் வன உரிமை சட்டத்திற்கு அவரவர் கைவச அனுபவத்தில் இருக்கும் நிலங்களுக்கு தனிமனித உரிமை பட்டா குடும்பத்திற்கு, 10 ஏக்கருக்கு மேல் மிகாமல் வழங்குவது தொடர்பாக, கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வன உரிமை குழு மற்றும் கிராம சபாக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்திட அறிவுரை வழங்கினார். மாவட்டத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தனி மனித உரிமை பட்டா வழங்குதல் தொடர்பாக பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்கப்படும் என்றும் கலெக்டர் அழகு மீனா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, ஆதிதிராவிடர் நலன் தனி தாசில்தார் திருவாழி, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வனத்துறை அலுவலர்கள், வன உரிமைச் சட்ட கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.