குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே உள்ள பூக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மகன் ஜெபின் (16) அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர்கள் வீட்டின் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகிறது.இந்த கட்டிட சுவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். சம்பவ தினம் மாலையில் சுவர்களுக்கு ஜெ பின் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தார் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ஜெபின் பரிதாபமாக உயிரிழந்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.