போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி

குமரி கலெக்டர், எஸ்பி பங்கேற்பு;

Update: 2025-08-11 11:44 GMT
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கலை அரங்கில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி, ஸ்டாலின் பங்கேற்றனர். விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவ மாணவிகளுடன் ஏற்றுக் கொண்டு, கலெக்டர் பேசியதாவது: எதிர்காலத்தை பாழாக்கக்கூடிய போதை பொருட்களை மாணவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. போதையில்லா குமரி மாவட்டத்தை உருவாக்கிட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றார். மேலும் போதை எதிர்ப்பு சார்ந்த சிறந்த 7 தன்னார்வ குழுக்களுக்கு 50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை கலெக்டர் வழங்கினார். தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்க்குமார் மீனா, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், ஆர்டிஓ காளீஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.

Similar News