சூலூர் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு: மக்கள் அச்சம்

சூலூர் அருகே மைலம்பட்டி, கரையாம்பாளையம் பாலாஜி நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.;

Update: 2025-08-11 11:45 GMT
சூலூர் அருகே மைலம்பட்டி, கரையாம்பாளையம் பாலாஜி நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாகச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அவை பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரைக் கண்டு துரத்திச் சென்று கடிக்க முயற்சிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பல்வேறு சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News