சிங்காநல்லூரில் சாக்கடை கழிவுகள் – துர்நாற்றம், தொற்று நோய் அபாயம்

சாக்கடை கழிவுகள் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அச்சம்.;

Update: 2025-08-11 12:13 GMT
கோவை சிங்காநல்லூர் அஸ்தாதிர நாயக்கர் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் துர்வாரி கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனுடன் குப்பைகளும் அங்கேயே குவிக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அந்தக் கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News