மாநில அளவிலான ஜூடோ போட்டியில் சாதனை.
மாநில அளவிலான ஜூடோ போட்டியில் சாதனை.;
மாநில அளவிலான சப்-ஜூனியர் மற்றும் சூப்பர் டிராபி ஜூடோ போட்டி கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை திருவண்ணா மலையில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறும் 35 மாணவர்களும், 15 மாணவிகளும் என மொத்தம் 50 பேர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒட்டு மொத்தமாக வென்று 2-வது இடத்தை பிடித்து கோப்பையை வென்றனர்