உளுந்துார்பேட்டை பிள்ளையார்கோவில் தெரு சக்தி பூமாரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நேற்று முன்தினம் நடந்தது.ஏரிக்கரையில் இருந்து அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ் தலைமையில் சத்தி கரகம் அழைத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து மகாதீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாகை வார்த்தல் நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.