கோவை: சூலூரில் செயற்கை கால் வழங்கும் முகாம்
விபத்துகள் மற்றும் சர்க்கரை நோயால் காலை இழந்த 15 பேருக்கு இலவசமாக செயற்கை கால் வழங்கப்பட்டது.;
சூலூர் அரிமா சங்கங்கள் மற்றும் திருப்பூர் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து, அலையன்ஸ் மாவட்டம் 262B சார்பில் செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது. இதில் விபத்துகள் மற்றும் சர்க்கரை நோயால் காலை இழந்த 15 பேருக்கு இலவசமாக செயற்கை கால் வழங்க தீர்மானிக்கப்பட்டது. முகாமை சாசன ஆளுநர் Dr. G. மயில்சாமி, IPDG Er. செவ்வேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட ஆளுநர் Dr. ஜான் பாஸ்கோ, FVDG வெற்றிச்செல்வி, SVDG தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துசாமி, PRO ஜான்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருத்துவ குழுவினரையும், நிர்வாகிகளையும் பாராட்டினர். மேலும் PDG சஜிடேவிட், சூலூர் கிரேட்டர் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் பல்வேறு முகாம்களை சிறப்பாக நடத்திய சேவை செம்மல் SVDG தர்மராஜை, PDG Ln. ரங்கநாதன் சிறப்பித்து பாராட்டினார்.