போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல் : பதபதக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் - கோவையில் பொதுமக்கள் அச்சம் !
வடமாநில தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் பல்வேறு தொழில்கள் உள்ளன. இங்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி புரிந்தும் வருகின்றனர். மேலும் இளைஞர்கள் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடுதிகள் மற்றும் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை, ரத்தினபுரி செக்கான் தோட்டம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில வாலிபர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று அவர்கள் அங்கு மது அருந்து உள்ளதாக, மேலும் போதை மருந்துகள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் ரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் அங்கு சென்று அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து உள்ளனர். இது அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட மாநில வாலிபர்களால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் முன்பு காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.