புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கையில் செயற்கை மூட்டுக்கிண்ணம் – கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சாதனை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் கையில் செயற்கை மூட்டுக்கிண்ணம் பொருத்தம்;
கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கையில் செயற்கை மூட்டுக்கிண்ணம் பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். திருப்பூர், உடுமலைபேட்டை மூங்கில்தொழுவைச் சேர்ந்த ஈஸ்வரன் (57) கடந்த ஒன்றரை மாதங்களாக இடது தோள்பட்டையில் வீக்கம், வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில், உணவுக்குழாயில் ஸ்குவோமாஸ் செல் கார்சினோமா புற்றுநோய் கண்டறியப்பட்டு, தோள்பட்டை பந்து கிண்ணமூட்டு முற்றிலும் அரிக்கப்பட்டது தெரியவந்தது. எலும்பு, மூட்டு துறை இயக்குநர் வெற்றிவேல்செழியன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுக்கிண்ணம் பொருத்தினர். நோயாளி தற்போது நலம் பெறுகிறார். அறுவை சிகிச்சை வெற்றிக்கு டீன் கீதாஞ்சலி மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.