கச்சிராயப்பாளையம் ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நலன் கருதி, அவர்களது வீட்டிற்கே சென்று குடிமை பொருட்களை விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.