விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-13 03:57 GMT
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் பழனி கண்டன உரையாற்றினர். மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.115 வழங்குவதை கண்டித்தும், 100 நாட்கள் என்பதை 200 நாட்களாக அதிகப்படுத்தியும், தினக்கூலி தொகையை ரூ.600 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News