கொண்டலாம்பட்டி அருகே நிலத்தரகர்கள் தின ஆலோசனை கூட்டம்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் சேலம் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் 22-ம் ஆண்டு நிலத்தரகர்கள் தின விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளரும், அன்னை பி.ஆர்.பிராபர்டீஸ் நிர்வாக இயக்குனருமான லைன்ஸ் ஹேமநாதன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் டாக்டர் விருகை வி.என்.கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில அமைப்பாளர் பாலசுப்ரமணியம், மாநில செயலாளர் எஸ்.கே.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் வடிவேல், பி.எம்.எஸ்.சதீஷ், கார்த்திகேயன், சண்முகம், சேகர், பழனிசாமி, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிலத்தரகர்கள் தின விழா, 22-ம் ஆண்டு விழா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.