வீட்டுக் கூரையில் புகையிலை பதுக்கல்

நித்திரவிளை;

Update: 2025-08-13 04:04 GMT
குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடைசெய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் நித்திரவிளை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலங்கோடு பகுதியில் உள்ள கடைகளில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்திரன் என்பவரது கடையில் சோதனை செய்தபோது, கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது கடையின் உரிமையாளர் கையில் ஒரு பையுடன் ஓடி உள்ளார். அவரை அதிகாரிகள் பின்தொடர்ந்தது சென்றபோது, கடையின் உட்புறம் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதன் மேல் ஏறி பார்த்தபோது கட்டுக்கட்டாக சுமார் 5 அரை கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, கடையை பூட்டி சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்றனர்.

Similar News