கோவையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை !
ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் நாட்டின் 79ஆம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.;
கோவை பிஆர்எஸ் மைதானத்தில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் நாட்டின் 79ஆம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் போலீசாருடன் தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். சுதந்திர தினம் அன்று வஉசி மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கொடி ஏற்றம், அணிவகுப்பு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.