கோவை: தாயுமானவர் திட்டம் துவக்கம் !

மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளிலேயே குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டம் துவக்கம்.;

Update: 2025-08-13 05:32 GMT
கோவையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளிலேயே குடிமைப் பொருள் வழங்கும் தாயுமானவர் திட்டம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தொடங்கப்பட்டது. சாய்பாபா காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறுகையில், கோவையில் 90 ஆயிரம் பயனாளிகளுக்காக 1205 வாகனங்கள், 1215 கிளஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாதம் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என்றார்.

Similar News