கோவை: விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களை விடுதி : கொடுமை செய்யும் வார்டன் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவர்கள்

அரசு விடுதியில் வார்டன் கொடுமை செய்வதாக மாணவர்கள் புகார்.;

Update: 2025-08-13 05:42 GMT
கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொழில் துறை பயிற்சி நிறுவனத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு இருக்கும் சமூக நீதி விடுதியில் மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் விடுதியின் வார்டன் பிரபு என்பவர் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் சாதி பேர் சொல்லி திட்டியும், தகாத வார்த்தையில் பேசியும், அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகவும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், வார்டன் பிரபு என்பவர் அடிக்கடி இழிவாக பேசி வருவதாகவும், சாதி பெயரை சொல்லி திட்டி வருவதாகவும், தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல் விடுதியில் சட்டை இல்லாமல் இருந்தால் அதற்கும் கடுமையாக தாக்குவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் யாரிடம் ? புகார் கூறுவது என்று தெரியாமல், கேமராவை உடைத்ததால் காவல் துறையினர் விசாரணைக்கு வந்தனர். அப்போது இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்த போது கூட வார்டன் பிரபு மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். எனவே வார்டன் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News