நரேந்திர மோடி ,டொனால்ட் ட்ரம்ப் உருப்படும் எரிப்பு
இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் டொனால்டு டிரம்ப், நரேந்திர மோடி உருவப்படங்களை எரித்து போராட்டம்;
இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எல்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் 100-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசு இந்திய விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைப்பதாகவும், இந்திய வேளாண் ஒப்பந்தம் மக்கள் விரோத ஒப்பந்தமாக விளங்குவதாகவும் குற்றஞ்சாட்டி, மத்திய அரசு அமெரிக்காவின் சுங்க மிரட்டலுக்கு அடி பணியக்கூடாது, இந்தியா-அமெரிக்க ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்த வேண்டும், இந்தியா-இங்கிலாந்து இடையிலான வர்த்தகத்தை ரத்து செய்ய வேண்டும், பொது சேவைகளை தனியாரிடம் தாரை வார்க்கக் கூடாது என வலியுறுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருவப்படங்களை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.