விளக்கை அம்பாளாகப் பாவித்து குங்கும அர்ச்சனை
மயிலாடுதுறை துர்க்கை அம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை , ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு :-;
மயிலாடுதுறையின் காவல் தெய்வங்களில் ஒன்றாக போற்றப்படும் சேந்தங்குடி பகுதியில் பழமை வாய்ந்த துர்கா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு 25 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று குழந்தை வரம் வேண்டியும், தாலி பாக்கியத்திற்காகவும் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து 108 நாமங்களை கூறி குங்கும அர்ச்சனை செய்து தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.