தேசிய அளவிலான காரத்தே போட்டியில் கள்ளக்குறிச்சி ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். சுதந்திர தின விழாவையொட்டி, வேலுார் மாவட்ட ஜோலார்பேட்டையில், ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே சார்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டி மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. போட்டிகளை முன்னாள் அமைச்சர் வீரமணி, கராத்தே போட்டி நடுவர் ரமேஷ் துவக்கி வைத்தனர்.