மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மதுரை திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கபாண்டி(52) என்பவருக்கு அருகேயுள்ள சித்தூரில் உள்ள விவசாய நிலத்தில் மிளகாய் செடிக்கான விதைகளை போட்டுள்ளார். நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று முன்தினம் சென்ற அவர் தண்ணீர் விட்டால் காட்டுப்பன்றிகள் நிலத்தில் நுழைந்து விதைகளை நாசம் செய்துவிடும் என கருதினார். மிளகாய் விதை பாத்தியை சுற்றி மின்வேலி அமைக்கப்போவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகன் பாண்டியராஜன்(21) விளைநிலத்திற்கு சென்று பார்த்த போது தங்கபாண்டி மின்சாரம் தாக்கி உயிழந்து கிடப்பதை பார்த்தார். இது குறித்து வில்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.