சாலைகளை சீரமைத்து கொடுத்த திமுக பிரமுகர்
மதுரை உசிலம்பட்டி அருகே சாலைகளை தனது சொந்த நிதியில் சீரமைத்து திமுக பிரமுகர் உதவினார்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி உசிலம்பட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலை நல்லிவீரன்பட்டி, வடகாட்டுப்பட்டி பிரிவுகள் அருகே (ரயில்வே கேட்) ரோடுகள் மேடு பள்ளமாகவும் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர், அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.13) திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தனது சொந்த நிதியில் அதனை சீர் செய்து கொடுத்தார். இதனால் அப் பகுதி மக்கள் இவருக்கு நன்றி தெரிவித்தனர்.