சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வடமாநில வாலிபர் பிடிபட்டார்
போலீசார் நடவடிக்கை;
சேலம் டவுன் போலீசார் முள்ளுவாடி கேட் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பண்டல், பண்டலாக 687 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது தெரிந்தது. பின்னர் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ராஜஸ்தானை சேர்ந்த நாதூர்சிங் மகன் வீரேந்திரசிங் (வயது 25) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்தில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து வீரேந்திரசிங்கை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.