சேலத்தில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்;

Update: 2025-08-14 09:17 GMT
சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சந்திரசேகர், சுரேஷ், இலியாஸ் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்று பேசினார். இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கு பதவி உயர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மதிவாணன் நன்றி கூறினார்.

Similar News