வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்த எம்எல்ஏ
மதுரை சோழவந்தானில் வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ திறந்து வைத்தார்;
மதுரை மாவட்டம் , மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், பொதும்பு ஊராட்சி ரங்கராஜபுரம் கிராமத்தில் நிழற் குடை கட்டிடம் ,புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை, , அதலை ஊராட்சியில் ரேஷன் கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இன்று (ஆக. 14 ) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.