ஆட்சியிலிருக்கும் ஊழல் மோடி அரசை பதவி விலக வலியுறுத்தி
காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம்;
பாஜகவிற்கு உடந்தையாக, தேர்தல் ஆணையம் செயல்பட்டு போலி வாக்காளர் பட்டியல் தயாரித்து அதன் மூலம் பாஜகவை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்த உதவி செய்கிறது. எனவே, ஆட்சியிலிருக்கும் ஊழல் மோடி அரசை பதவி விலக வலியுறுத்தி "வாக்குத் திருடனே,பதவி விலகு" என்ற முழக்கத்துடன் நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நேற்று இரவு 7 மணிக்கு கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தொடங்கி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. கண்டன ஊர்வலத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் ஏ.ஆர்.நௌஷாத் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ.எச்.காதர், கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் எஸ்.லியோ, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஜெ.முகம்மது ஆஷிக், மாவட்ட சேவாதள தலைவர் நாசீர் அலி, நாகூர் நகரத் தலைவர் எஸ்.சர்புதீன் மரைக்காயர், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.விஷ்ணுவர்த்தன், மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஆர்.என்.ஏ.விஜய்பரணி மற்றும் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.