ஆட்சியரிடம் விருது பெற்ற கீரீன் பவுண்டேஷன்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யானமலை கிரீன் பவுண்டேஷன் விருதினை பெற்றது.;

Update: 2025-08-15 09:58 GMT
பசுமை முதன்மையாளர் விருது மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் பசுமை பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலான யானைமலை கிரீன் பவுண்டேஷன் என்ற அமைப்பிற்கு பசுமைச் சாம்பியன் விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ண பிரசாத், யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் பிரபு, ராகேஷ், பாண்டி மற்றும் உறுப்பினர்கள் பாஸ்கரன், பாலமுருகன், பரமேஸ்வரன், ஸ்டெல்லா மேரி, ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு விருதினைப் பெற்றனர்.

Similar News