மலைக்குடிப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் நேற்று மலைக்குடிபட்டி இந்திராநகர் பகுதியில் மதுவிற்ற பொன்னுச்சாமி (61) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.