ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் கூட்டம்
தர்மபுரி:தொடர் விடுமுறை எதிரொலி ஒகேனக்கலில் குவிந்த பயணிகள் கூட்டம்;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 16, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகாலை முதலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்கள் என்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர் அருவியில் குளித்தும் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர் பாதுகாப்பு கருதி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து 3-வது நாளாக காவிரி ஆற்றில் 6500 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்