மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-08-16 10:16 GMT
அதிமுக பொதுச்செயலாளர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் தொடர்ச்சியாக வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு வருகை தருவதையொட்டி மதுராந்தகம் நகராட்சியில் வார்டு வாரியாக மொத்தம் 5 வார்டுகளில் நடைபெற்ற கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வரவேற்பு குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் KC.சரவணன், மதுராந்தகம் நகர அம்மா பேரவை கழக செயலாளர் MB.சீனிவாசன், நகர துணை செயலாளர், கிளை செயலாளர்கள் நகர கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News