பைக் மீது லாரி மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
பைக் மீது லாரி மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு;
திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியைச் சேர்ந்த பூபதி, 35. இவர், நேற்று காலை 5:30 மணியளவில், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேலக்கோட்டையூர் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத லாரி அவரது பைக் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். லாரி தப்பிச் சென்றது. தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பூபதி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.