சூரிய சக்தி உயர் கோபுர மின்விளக்குகளை பழுது நீக்க கோரிக்கை
சூரிய சக்தி உயர் கோபுர மின்விளக்குகளை பழுது நீக்க கோரிக்கை;
மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட, சிறுகளத்துார் கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், வஞ்சியம்மன் கோவில் தெரு மற்றும் விநாயகர் கோவில் எதிரே, சூரியசக்தி உயர் கோபுர மின்விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டன.இந்த மின்விளக்குகள் பழுதடைந்து, கடந்த ஓராண்டாக எரியாமல், இப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து, சிலாவட்டம் ஊராட்சி மன்ற தலைவரிடம், சிறுகளத்துார் கிராம மக்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மதுராந்தகம் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, புதிதாக அமைக்கப்பட்ட சூரிய சக்தி உயர் கோபுர மின்விளக்குகளை பழுது நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சிறுகளத்துார் கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்