பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துனர் படுகாயம்
மதுரை உசிலம்பட்டி அருகே ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துனர் படுகாயம் அடைந்தார்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த குமரேசன்., அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வரும் நிலையில் இன்று (ஆக.16) குமரேசன், தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கி கொண்டிருந்த போது உசிலம்பட்டி அருகே முண்டுவேலன்பட்டி பாண்டி கோவில் வளைவில் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனை கண்டு ஓட்டுநர் மற்றும் பயணிகள் பேருந்தை நிறுத்தி, படுகாயமடைந்த குமரேசனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.