கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலி
மதுரை அருகே கார் பழுத்து பார்க்கும் பொழுது கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.;
மதுரை முத்துப்பட்டி புதுக்குளம் காசி நகரை சேர்ந்த சண்முகராஜாவின் மகன் ஷ்யாம் சுந்தர் (22) என்பவர் தந்தையுடன் கோவில் பாப்பாக்குடி வெங்கடாசல நகர் சாலை சந்திப்பில் கார்கன்சல்டிங் செய்து வந்தார். இங்கு விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது கார் கவிழ்ந்தது. பலத்த காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.