கஞ்சா விற்றவர் கைது

கைது;

Update: 2025-08-17 06:33 GMT
திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில், சாய்பாபா கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேயரில், மணலுார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று மதியம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்த தஸ்தகீர் மகன் அகமத் பாஷா, 35; என தெரியவந்தது. மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அகமத் பாஷாவை கைது செய்து, 130 கிராம் கஞ்சா, எடை மெஷின், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News