ஓமலூரில் நாளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் அறிக்கை;
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், சேலம் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் ஓமலூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்தும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும், விளையாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் திருவேற்காடு சீனிவாசன், பொன் ராஜா, ஜனனி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.