தேசிய சிலம்பம் போட்டியில் சாதித்த மாணவனுக்கு
பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு;
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி யூத் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் இருந்து மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 600 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வாழக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லதுரை-சத்யா தம்பதியின் மகனும், பிளஸ்-2 மாணவருமான, மல்லூர் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் இளம் வீரர் துளசிமணி (வயது 17) கலந்து கொண்டு தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்று சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து மாணவன் துளசிமணிக்கு மல்லூர் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி பயிற்சியாளர் வே.மாதையன் மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.