உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவிப்பு;

Update: 2025-08-18 03:32 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு 12,200 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, உளுந்து 122 ஏக்கரும், கேழ்வரகு 425 ஏக்கரும், கரும்பு 800 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பகுதிகளில் உள்ள வனம் மற்றும் ஏரிப்பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள், விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங்களுக்கு இரவு நேரங்களில் கூட்டமாக வருகின்றன. அவை பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதையடுத்து, காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க, விவசாயிகள் இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பல்வேறு விலங்குகளின் சத்தங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், வெடிகள் வெடித்தும் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை குறைக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். சில விவசாயிகள், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, சட்டத்திற்கு புறம்பாக மின்வேலியும் அமைக்கின்றனர். மின்வேலி அமைப்பதால், அப்பகுதிகளில் மனித உயிர்கள் பறிபோகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

Similar News