கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

கோரிக்கை;

Update: 2025-08-18 03:36 GMT
உளுந்துார்பேட்டையில் இருந்து பாண்டூர், கொட்டாங்குச்சி, கிளியூர் வழியாக அத்திப்பாக்கம், நத்தாமூர், வடமாம்பாக்கம், திருக்கோவிலுாருக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப் படுகிறது. இதில் அத்திப்பாக்கத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் தடம் எண் 16 எச் டவுன் பஸ் கிளியூர், குன்னத்துார், பிள்ளையார் குப்பம், கொரட்டங்குறிச்சி, பாண்டூர் வழியாக உளுந்துார்பேட்டை செல்கிறது. அதேபோல் நத்தாமூரிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்படும் தடம் எண் 1 டவுன்பஸ் கிளியூர், குன்னத்துார் வழியாகவும், வடமாம்பாக்கத்தில் இருந்து காலை 10:00 மணிக்கு புறப்படும் தடம் எண் 13 டவுன் பஸ் நத்தாமூர் கீளியூர் வழியாக உளுந்துார்பேட்டை செல்கிறது.பள்ளி, கல்லுாரி, வேலைக்குச் செல்லும் காலை நேரத்தில் இப்பகுதியில் இருந்து 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் டவுன் பஸ்களில் தினசரி கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்சில் இடம் கிடைக்காததாலும், வேறு பஸ் இல்லாத காரணத்தால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் 2 டவுன் பஸ்களிலும் படிகட்டுகளில் தொங்கியபடியும், பஸ் மேற்கூரை மீது அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

Similar News