சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75ம் ஆண்டு பவள விழா நடந்தது.உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், துணை சேர்மன் ராகேஷ், உதவி திட்ட அலுவலர் மணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹசீனா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வேல்மணி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் தண்டபாணி, பட்டிமன்ற பேச்சாளர் இந்திரா விஜய லட்சுமி சிறப்புரையாற்றினர்.