அரசு பள்ளியில் புதிய சமையல் கூடம் திறப்பு

திறப்பு;

Update: 2025-08-18 04:34 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் புதிய சமையல் அறை கட்டடம் திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பாரதியார் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய சமையல் அறை கட்டடத்தை திறந்து வைத்தார். பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News