கோகுலாஷ்டமி விழா

விழா;

Update: 2025-08-18 04:39 GMT
சங்கராபுரத்தில் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ராஜகிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. நேற்று முன்தினம் ராஜகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், இரவு ராஜகிருஷ்ணனர் சுவாமி வீதியுலா நடந்தது. தியாகதுருகம் கம்பன் கழக தலைவர் டாக்டர் நடேசன், கண்ணனின் லீலைகளும், தத்துவமும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். யாதவர் சங்க தலைவர் முனுசாமி, துரைராஜ், அன்பழகன், துரை, முருகன், அரசு, சுப்ரமணியன், கருணா, விஜயகுமார், குசேலன், முத்துக்கருப்பன், தர்மகர்த்தா பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News