ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்
3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி, திருக்குறள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி , மெல்லிசை - தனி பாடல் போட்டி , தேச பக்தி பாடல் போட்டி, களி மண் பொம்மை செய்தல் போட்டி, மாறுவேடம் போட்டி, நாட்டுப்புற நடனம் - தனி நபர் போட்டி, பரத நாட்டியம் - தனி நபர் போட்டி, ஓவியம் வரைந்து;
பெரம்பலூர் அருகே செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைப்பெற்றது. பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2025 ஆகஸ்ட் 18 இன்று பள்ளி கல்வி துறை சார்பில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் பள்ளி அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைப்பெற்றது. இதில் 1 மற்றும், 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், களி மண் பொம்மை செய்தல் , மாறுவேடம் போட்டிகள் நடைப்பெற்றன. 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி, திருக்குறள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி , மெல்லிசை - தனி பாடல் போட்டி , தேச பக்தி பாடல் போட்டி, களி மண் பொம்மை செய்தல் போட்டி, மாறுவேடம் போட்டி, நாட்டுப்புற நடனம் - தனி நபர் போட்டி, பரத நாட்டியம் - தனி நபர் போட்டி, ஓவியம் வரைந்து வண்ணம் நீட்டுதல் போட்டி, தனிநபர் நடிப்பு போட்டி, நாட்டுப்புற நடனம் - குழு போட்டி ஆகிய போட்டிகள் நடைப்பெற்றன . மாணவர்கள் தமது திறமையை வெளி கொணர்ந்த நிலையில் வட்டார அளவில் நடைப்பெறும் போட்டிக்கு பல மாணவர்கள் தெரிவு செய்தனர். போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்க அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் மைனாவதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதா மற்றும் செங்குணம் குமார் அய்யாவு ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்.