தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்;
தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் கலந்து கொண்டனர்! தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், பேரூர் கழகச் செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர், ஏ.எஸ்.ஜாகிர்உசேன் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர் மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன்,தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வி.சி.ரவி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி "ஓரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்துடன் தொடங்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியை திறம்பட செயலாற்றி நமது மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,41,018 உறுப்பினர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,40,311 உறுப்பினர்களும் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் இந்த செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி கழக உயிர் நாளங்களான அனைத்து கழக கிளைகளிலும் உடனடியாக கிளைக் கழக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி மினிட் நோட்டுகளில் பதிவிட்டு, தீர்மானங்களை இயற்றி, மினிட் நோட்டுகளை ஒன்றிய, மாவட்ட கழகங்களின் வழியாக தலைமை கழகத்திடம் ஒப்படைக்க வேண்டுமாறு அனைத்து கழக நிர்வாகிகளையும் இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக விளங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களுடைய சிற்றன்னை திருமதி செல்லம்மாள் மறைவிற்கும், பெரம்பலூர் நகரம், அரனாரை கழக முன்னாள் மாவட்ட பிரதிநிதி அரனாரை ஜெயக்குமார் சித்தப்பா மு.கருணாநிதி மறைவிற்கும், பெரம்பலூர் ஒன்றியம, பொம்மனப்பாடி முன்னாள் கிளைக் கழக செயலாளர் கருணாநிதி மறைவிற்கும், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் வெள்ளுவாடி கிளைக் கழக செயலாளர் வரதராஜன் மனைவி பூங்காவனம் மறைவிற்கும், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் வி.களத்தூர் கிளைக் கழக இளைஞரணி அமைப்பாளர் முகமது நிஷார் மறைவிற்கும், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் மதியழகன் தாயார் காசாம்பு மறைவிற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், கொளக்காநத்தம் ஊராட்சி தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரும் , ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளருமான நல்லாசிரியர் கண்ணையன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.