கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு, நுாதன முறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் குப்பன், கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு, நுாதன முறையில் அலுவலர்களிடம் மனு அளித்தார்.