கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு, டீசல் கேனுடன் வந்த வயதான தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அலுவலக நுழைவு வாயிலில் பையுடன் மனு அளிக்க வந்த வயதான தம்பதியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பையில் ஒரு லிட்டர் டீசல் கேன் இருந்தது தெரிந்தது. போலீசார் டீசல் கேன் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.