கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த 50 மாணவர்கள், பழைய சிறுவங்கூர் சங்கர் இயற்கை விவசாய பண்ணைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னுராசன் துவக்கி வைத்தார். அட்மா அலுவலர் சைமன், இயற்கை வேளாண்மை அவசியம், முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.